தைபே, னா கடந்த 24 மணி நேரத்தில் 71 போர் விமானங்கள் மற்றும் ஏழு போர்க்கப்பல்களை, தைவானை நோக்கி அனுப்பி அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது.
நம் அண்டை நாடான சீனா, கிழக்காசிய நாடான தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது.
இங்கு, வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் வந்து செல்வதை சீனா விரும்பவில்லை. சமீபத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு வந்து சென்றார்.
இதையடுத்து, தைவான் ஜலசந்திக்கு சீனா போர்க்கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தியது.
இந்நிலையில், சீனா கடந்த 24 மணி நேரத்தில் 71 போர் விமானங்கள் மற்றும் ஏழு போர்க் கப்பல்களை தைவான் நோக்கி அனுப்பி உள்ளது.
இது குறித்து, தைவான் ராணுவ அமைச்சக அதிகாரி கூறியதாவது:
சீனா மீண்டும் எங்கள் நாட்டுக்கு போர் விமானங்களை அனுப்பி அச்சுறுத்துகிறது. எங்கள் ராணுவம் சீனாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. சீனாவுக்கு பதிலடி தர, தைவான் ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement