மகள்களை காப்பாற்ற உயிரை விட்ட பிரித்தானிய பெண்! எல்லாம் அழிந்துவிட்டதாக கதறும் கணவர்

அவுஸ்திரேலியாவில் பிரித்தானிய குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில், இரண்டு பிள்ளைகளின் தாய் கொல்லப்பட்டார்.

பிரித்தானிய பெண்ணின் குடும்பம்

அவுஸ்திரேலியாவின் குயிஸ்ன்லாந்து நகரில் பிரித்தானியாவைச் சேர்ந்த எம்மா லொவெல் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

எம்மாவின் குடும்பம் 11 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவின் Suffolk நகரில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது.

மகள்களை காப்பாற்ற உயிரை விட்ட பிரித்தானிய பெண்! எல்லாம் அழிந்துவிட்டதாக கதறும் கணவர் | Uk Woman Killed Who Try To Save Her Family

இந்த நிலையில், எம்மாவின் வீட்டிற்குள் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

கையில் கத்தி வைத்திருந்த அவர்கள் இருவரும் எம்மாவின் குடும்பத்தை தாக்க துவங்கியுள்ளனர்.

போராடிய இரண்டு மகள்களின் தாய்

லொவெல் மற்றும் எம்மா இருவரும் அந்த சிறுவர்களுடன் போராடியுள்ளனர். ஆனால் இருவரும் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டனர்.

இதில் எம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.

மகள்களை காப்பாற்ற உயிரை விட்ட பிரித்தானிய பெண்! எல்லாம் அழிந்துவிட்டதாக கதறும் கணவர் | Uk Woman Killed Who Try To Save Her Family

அவரது கணவர் லொவெல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறார்களும் கைது செய்யப்பட்டனர்.

கதறும் கணவர்

தனது மனைவி இழந்த லொவெல் இதுகுறித்து கூறுகையில், ‘எம்மா எங்கள் குடும்பத்தின் பசையாக இருந்தார். அவர் வேடிக்கையானவர், புத்திசாலி, மிகவும் அக்கறையுள்ளவர், யாருக்காகவும் எதையும் செய்வார்.

அவர் என்னையும் எங்கள் குடும்பத்தையும் காக்க முயன்று இறந்தார். இந்த சம்பவம் நடந்ததால் எங்களுடைய எல்லாம் அழிந்துவிட்டது. நான் அவளை பிரிந்து மிகவும் வாடுகிறேன்’ என சோகத்துடன் ஊடகத்திடம் கூறினார்.      

மகள்களை காப்பாற்ற உயிரை விட்ட பிரித்தானிய பெண்! எல்லாம் அழிந்துவிட்டதாக கதறும் கணவர் | Uk Woman Killed Who Try To Save Her Family

மகள்களை காப்பாற்ற உயிரை விட்ட பிரித்தானிய பெண்! எல்லாம் அழிந்துவிட்டதாக கதறும் கணவர் | Uk Woman Killed Who Try To Save Her Family

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.