மகாராணியாரின் மரணம் பல நாடுகளிலுள்ள மக்களை காலனி ஆதிக்க நினைவுகளுக்குக் கொண்டு சென்றுள்ளது.
ராஜ குடும்பத்தின் மீது சமீபத்தில் சுமத்தப்பட்ட இனவெறுப்புக் குற்றச்சாட்டுகள் அதை மேலும் அதிகரித்துள்ளன.
இனவெறுப்புக் குற்றச்சாட்டுகள்
மன்னர் சார்லசின் மகனான இளவரசர் ஹரி ஒரு அமெரிக்க கலப்பினப் பெண்ணான மேகனை திருமணம் செய்தபோது, ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர், மேகனுக்குப் பிறக்கும் குழந்தை என்ன நிறத்தில் இருக்கும் என்று கேட்டாராம்.
மகாராணியாரின் உதவியாளராக இருந்த Lady Susan Hussey என்ற பெண் சமீபத்தில் கருப்பினப்பெண்ணிடம் அவரது நிறம் குறித்து கேள்வி எழுப்பிய விடயம் பெரும் சர்ச்சையை உருவாக்கி, அவர் ராஜினாமா செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.
Getty
அத்துடன், ராஜ குடும்பத்தின் கடந்த கால செயல்கள் சிலவும் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. ராஜ குடும்பத்தால் நிதியுதவி பெற்ற The Royal African Company என்ற நிறுவனம் ஏராளமான ஆப்பிரிக்க ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அமெரிக்க நாடுகளுக்கு அடிமைகளாக விற்றதில் பெரும்பங்கு வகித்துள்ள விடயம் மீண்டும் கவனம் ஈர்த்துவருகிறது.
ஒரே நம்பிக்கை இவர்தான்
ஆக, தொடர்ச்சியாக இனவெறுப்புக் குற்றச்சாட்டுகள், அடிமை வியாபாரம் குறித்து வெளியாகும் தகவல்கள், குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இளவரசர் ஆண்ட்ரூ, எல்லாவற்றிற்கும் மேலாக மகாராணியாரின் மரணம் என பல விடயங்களால் ராஜ குடும்பத்தின் புகழ் மங்கி வருகிறது.
இந்நிலையில், ராஜ குடும்பத்தின் ஒரே எதிர்கால நம்பிக்கை இளவரசி கேட்தான் என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளரான Daniela Elser.
புகழ் பெற்று விளங்கும் இளவரசி கேட்தான் ராஜ குடும்பத்தின் சொத்து என்று கூறும் Daniela, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையே இல்லாமலிருக்கும் ராஜ குடும்பத்தின் பெரிய நம்பிக்கை, ஏன் ஒரே நம்பிக்கையே இளவரசி கேட்தான் என்கிறார்.
Getty