டாஸ்மாக் கடைகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன? என்ற விவரங்களை, சீலிடப்பட்ட கவரில் ஜனவரி 6ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விவரங்களுக்கு, டாஸ்மாக் நிறுவனம் தகவல் தர மறுத்ததையடுத்து, 2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், விவரங்களை அளிக்குமாறு ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு, இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விவரங்களை சமர்ப்பிக்காத டாஸ்மாக் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அதனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.