சென்னையில் இலங்கையை சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழர்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
இந்த விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதன்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராகவேந்திரா (65), மனைவி உதயராணி (54) தம்பதி தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தனர்.
timesofindia
நெஞ்சு வலியால் மரணம்
சுற்றுலாவை நிறைவு செய்த ராகவேந்திரா தம்பதி இலங்கை திரும்ப சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் பெற்று சோதனை பிரிவில் நின்றிருந்தபோது ராகவேந்திராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.