விசாகப்பட்டினம், ஆந்திராவிலுள்ள தனியார் மருந்து தொழிற்சாலையில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார்.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அனகாபள்ளி மாவட்டத்தில் தனியார் மருந்து தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள மூன்றாவது யூனிட்டில், ரசாயன பொருள் ஒன்று கசிந்து, திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை அணைக்கச் சென்ற ஐந்து தொழிலாளர்களில் நால்வர், அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் அடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நான்கு பேர்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து, அனகாபள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement