மாணவர்களை போதைப்பொருள் காரர்களிடம் இருந்து மீட்டெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை

இரத்மலானை மற்றும் கல்கிஸை பிரதேசத்தில் முக்கிய பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப் பொருள்  விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் விற்பனைக்காக தயார்படுத்தி இருந்த 7200 மில்லிகிராம் மாவா  போதைப்பொருடன் கல்சிசை பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதான நபர்.. சந்தேக நபர் , கொழும்புக்கு கொண்டு வரப்பட்ட மாவா போதை பொருளை வீட்டிலிருந்து பொதி செய்து இரகசியமான முறையில் பாடசாலை வளவில் நடமாடி நீண்ட காலமாக விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிசையில் உள்ள முக்கிய பாடசாலைக்கு அருகாமையில் வீடொன்றில் இவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக தமது பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலை பகுதிகளில் சந்தேகமான முறையில் செயல்படும்  விற்பனையாளர்கள் குறித்து கூடுதலான கவனம் செலுத்துமாறு பொலிஸார் பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த மோசடிகாரர்களிடமிருந்து மாணவர்களை மீட்டெடுப்பதற்கு பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோரிடம் பொலிஸார் விசேட கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.