மூக்குவழி கோவிட் மருந்து: ஒரு டோஸ் ரூ.800 ஆக விலை நிர்ணயம்| Nasal covid medicine: Price fixed at Rs 800 per dose

புதுடில்லி: நாட்டில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதை அடுத்து பாரத் பயோ டெக் நிறுவனத்தின் மூக்கு வழியாக செலுத்தும் கோவிட் மருந்துக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இன்கோவாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இம்மருந்து முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் எனவும், பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பு மருந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், இந்த தடுப்பு மருந்துக்கான விலையை பாரத் பயோ டெக் நிறுவனம் தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ்க்கு ரூ.800 ஆக நிர்ணயித்துள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, அரசு மருத்துவமனைகளில் ஒரு டோஸ்க்கு ரூ.325 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.