மெட்ரோ கேஷ் & கேரி இந்தியா நிறுவனத்தை ரூ.2,850 கோடிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்குகிறது…!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) துணை நிறுவனமாக ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம், மெட்ரோ கேஷ் & கேரி இந்தியா பிரைவேட் லிமிடெட் (மெட்ரோ இந்தியா) நிறுவனத்தின் 100% பங்குகளை ₹2,850 கோடிக்கு வாங்க முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

மெட்ரோ கேஷ் & கேரி

மெட்ரோ கேஷ் & கேரி என்றால் என்ன?

மெட்ரோ இந்தியா நிறுவனம் 2003-ஆம் ஆண்டில் இந்தியாவில் கேஷ் அண்ட் கேரி வணிக வடிவத்தை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாக இந்தியாவில் செயல்படத் தொடங்கியது.

இது பழங்கள் மற்றும் காய்கறிகள், பொது மளிகைப் பொருள்கள், எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருள்கள் மற்றும் ஆடைகள் போன்ற பொருள்களை வாடிக்கையாளர்களுக்கும், ஹோட்டல்கள், உணவகங்கள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள், சிறு சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சிறிய மளிகைக்கடைகள் ஆகியவற்றிற்கும் விற்பனை செய்கிறது.

மெட்ரோ கேஷ் & கேரி நிறுவனமானது, நாட்டின் 21 நகரங்களில் சுமார் 3,500 பணியாளர்களுடன் 31 பெரிய ஃபார்மேட் ஸ்டோர்களைக் கொண்டுள்ளது.

2022 நிதியாண்டின்படி, மெட்ரோ இந்தியா ₹7,700 கோடி விற்பனை செய்துள்ளது. மெட்ரோ இந்தியா இந்திய B2B (பிசினஸ்-டு-பிசினஸ்) சந்தையில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

ரிலையன்ஸ் அம்பானி

மல்ட்டி-சேனல் B2B கேஷ் அண்ட் கேரி மொத்த விற்பனையாளர் இந்தியாவில் 3 மில்லியனுக்கும் அதிகமான B2B வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் ஒரு மில்லியன் பேர் அதன் ஸ்டோர் நெட்வொர்க் மற்றும் eB2B செயலி மூலம் அதிகம் வாங்குபவர்களாக உள்ளனர். வலுவான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் திடமான பல சேனல் தளத்தை உருவாக்கியுள்ளது.

ஒப்பந்தத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் ரீடெய்ல், முக்கியமான நகரங்களில் அமைந்துள்ள மெட்ரோ இந்தியா கடைகளின் பரந்த நெட்வொர்க்கையும், பதிவுசெய்யப்பட்ட சிறிய மளிகைக் கடை மற்றும் பிற நிறுவன வாடிக்கையாளர்களின் பெரிய தளத்தையும், வலுவான சப்ளையர் நெட்வொர்க்கையும் பெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.