கேதா, குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரரை அடித்துக் கொன்ற வழக்கில், ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத்தின், நடியாட் மாவட்டத்தில் உள்ள சக்லசி கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் மேலாஜி வகேலா, விடுமுறையில் தன் குடும்பத்தை காண வந்துள்ளார்.
அப்போது, தன் மகளின் ஆபாச ‘வீடியோ’ ஒன்று இணையத்தில் வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக, அவர் தன் மகளிடம் விசாரித்ததில், உடன் படிக்கும் மாணவன் தான் இதை செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவனின் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்ற போது, அவனுடைய உறவினர்கள் சரமாரியாக தாக்கியதில், மேலாஜி வகேலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அவருடன் சென்ற மகனும், அவருடைய மனைவியும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய ஏழு பேர் மீதும், கொலை, கொலை முயற்சி என ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement