வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு, டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்த காலக்கெடுவுக்குள் வருமான வரி தாக்கலை செய்து
விடுமாறு, வருமான வரி துறை அறிவுறுத்தி உள்ளது.கடந்த 2021 – 22ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கடைசிநாள் ஜூலை 1 ஆகும். அதன் பிறகு அபராதத்துடன் தாக்கல் செய்வதற்கு, கடைசி நாள் டிசம்பர் 31ம்
தேதியாகும். மேலும் திருத்தப்பட்ட கணக்கை தாக்கல் செய்வதற்கும் கடைசிநாள் டிசம்பர் 31ம் தேதியாகும். இதன்பிறகு தாக்கல் செய்ய முடியாது.
![]() |
மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் ஆளாக வேண்டி வரலாம்.தற்போது முழுமையாக டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நபர்களை மிக எளிதாக கண்டுபிடித்து, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை, உடனடியாக மேற்கொள்ள முடியும்.
டிசம்பர் 18ம் தேதி நிலவரப்படி, இதுவரை கிட்டத்தட்ட 7.06 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. கடந்த 17ம் தேதி
நிலவரப்படி, 2.27 லட்சம் கோடி ரூபாய் ‘ரீபண்டு’ வழங்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement