விஜய்யை பற்றி ஒண்ணுமே தெரியாது! விரக்தியில் பேசிய தாய் ஷோபா!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் எப்படி பிரபலமாக இருக்கிறாரோ அதேபோல அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் பிரபலமானவர்.  பிரபல இயக்குனரான இவர் தமிழ் சினிமாவில் பல சூப்பர் படங்களை கொடுத்துள்ளார், அதேபோல விஜய்யின் தாயார் ஷோபா தனது மகனுடன் சேர்ந்தும் சில பாடல்களை பாடி பிரபலமாகியுள்ளார்.  இவ்வளவு அழகான இந்த குடும்பத்தில் இப்போது பிரிந்துவிட்டதாக பல தகவல்கள் ஊடகங்களில் வெளியானது.  அதாவது விஜய்யின் பெயரை பயன்படுத்தி அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் செய்வதால் தந்தை மீது விஜய் கோபத்தில் இருப்பதாகவும், தனது குடும்பத்துடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என்றும் பல செய்திகளில் வெளியானது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய்யின் பெற்றோர் தங்களது 80-வது பிறந்தநாளை தனியாக கொண்டாடினார், இதில் விஜய் கலந்துகொள்ளாதது சர்ச்சையானது.  தனது தாய் தந்தையை கவனிக்காத நடிகர் தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்கிறார் என்று பலரும் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.  நீண்ட நாட்களாகவே விஜய் அவரது தாய், தந்தையரை விட்டு விலகிவிட்டதாக பல செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் ஒரு விஷயம் நடந்தது.  வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் தந்தையும், தாயும் கலந்துகொண்டு தங்களது மகனை ஆரத்தழுவி பாசத்தை வெளிப்படுத்தி தங்களை பற்றி வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

 

இந்நிலையில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் விஜய்யின் தாயார் ஷோபா சாமி தரிசனம் செய்தார்.  அப்போது அவரை சூழ்ந்த செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.  அதற்கு பதிலளித்தவர், உலக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தான் நான் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தேன், விஜய்யின் படமும் நன்றாக ஓட வேண்டும் என்று கூறினார்.  விஜய்யின் அடுத்த படம் பற்றி கேட்டதற்கு பதிலளித்தவர், இந்த படத்திலேயே அவர் எப்படி நடிக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை அப்படி இருக்கையில் அடுத்த படத்தை பற்றி கேட்கிறீர்கள், இது குடும்ப பாங்கான கதை என்பது மட்டும் தான் எனக்கு தெரியும் வேறு எதுவுமே தெரியாது என்று கூறினார்.  மேலும் விஜய் அரசியல் வருவது குறித்து எனக்கும் எனது கணவருக்கும் எதுவுமே தெரியாது அவ்வளவுதான் என்று கூறினார்.  தற்போது விஜய்யின் தாயார் ஷோபா இப்படி கூறியிருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.