பாட்னா: விஐபிக்கள், விவிஐபிக்கள் பயணம் செய்ய புதிய விமானம், ஹெலிகாப்டரை வாங்க பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பீகார் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்கள் பயணம் செய்ய புதிய ஜெட் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவற்றை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புதிய ஜெட் விமானம், ஹெலிகாப்டர் வாங்குவதற்கான வழிமுறைகளை வகுக்கு தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
