விற்பனைக்கு வந்த பாகிஸ்தான் தூதரக கட்டிடம் – ஏலத்தில் முன்னிலையில் உள்ள யூத குழு, இந்திய தொழிலதிபர்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டனில் பாகிஸ்தானுக்கு சொந்தமான 3 தூதரக கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் வாஷிங்டன் வடகிழக்கு சர்வதேச கோர்ட்டு அருகே உள்ள கட்டிடத்தில் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், வாஷிங்டன்னின் மாகாணம் மாஸசூசெட்ஸ் அவன்யூவில் உள்ள ஒரு கட்டிடத்திலும் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் தற்போது செயல்பாட்டில் இல்லை.

இதனிடையே, வாஷிங்டனின் வடமேற்கில் ஆர்.ஸ்டிரிட்(தெரு)-இல் 1950 முதல் 2000 ம் ஆண்டு வரை பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆர்.ஸ்டிர்ட் தெருவில் உள்ள தூதரக கட்டிடத்தை விற்பனை செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்த கட்டிடத்தை வாங்க விருப்பமுல்லோர் ஏலத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த ஏல அழைப்பில் பங்கேற்று பாகிஸ்தான் தூதரக கட்டிடத்தை வாங்க யூத குழுவும், இந்தியாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

கட்டிடத்தை 6.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கிய யூத குழு ஒன்றும் ஏல ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. அதேவேளை, இந்திய தொழிலதிபர் இந்த கட்டிடத்தை 5 மில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளார்.

இந்த 2 ஒப்பந்ததாரர்களுக்கு அடுத்தபடியாக கட்டிடத்தை 4 மில்லியன் டாலருக்கு வாங்க பாகிஸ்தானை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளார்.

ஒப்பந்தபுள்ளிகளின் அடிப்படையில் அதிக தொகைக்கு ஏலம் கேட்டுள்ள யூத குழுவிற்கு பாகிஸ்தான் தூதரக கட்டிடம் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலத்தொகையின் அடிப்படையில் பாகிஸ்தான் தூதரக கட்டிடம் யூத குழுவிற்கு விற்பனை செய்யப்படும் பட்சத்தில் அந்த கட்டிடத்தை யூத மத வழிபாட்டு தலமாக மாற்றியமைக்க அந்த குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.