2022 ரோலர் கோஸ்டர் போல் இருந்தது – மஞ்சிமா மோகன்

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன் தமிழில் சில படங்களில் நடித்தார். தேவராட்டம் படத்தில் நடித்தபோது உடன் நடித்த கவுதம் கார்த்திக்கை காதலித்தார். சமீபத்தில் இவர்களது திருமணம் நடந்தது. 2022ம் ஆண்டு தனக்கு எப்படி இருந்தது என்பதை விவரித்துள்ளார் மஞ்சிமா.

இவர் கூறுகையில், ‛‛2022 ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்தது. இந்தாண்டு முழுவதும் கற்றுக் கொண்டிருந்தேன். உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால் வேறு யாரும் நிற்க மாட்டார்கள். உங்களை நேசிக்க ஒரு போதும் மறந்துவிடாதீர்கள். உங்களை முதன்மைப்படுத்தவும் வெட்கப்படாதீர்கள். இந்த இரண்டு விஷயங்களையும் இந்தாண்டில் கற்றுக் கொண்டேன்.

2022ம் ஆண்டின் இரண்டாம் பாதி எனக்கு சாகசம் நிறைந்ததாக இருந்தது. எனது நண்பரை திருமணம் செய்து மற்றொரு படி முன்னேறி உள்ளேன். இப்போது நான் பாதுகாப்பாகவும், திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். இது நான் எடுத்த சிறந்த முடிவு. 2023ம் ஆண்டிலும் சாகசங்கள் தொடரும்'' என்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.