வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வரும் 2035ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 10 டிரில்லியன் டாலராக உயரும் என இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (சி.இ.பி.ஆர்) கணித்துள்ளது.

இது தொடர்பாக, சி.இ.பி.ஆர் கூறுகையில், வரும் 2035ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 10 டிரில்லியன் டாலராக உயரும். 2037-ம் ஆண்டுக்குள் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 6.4 சதவீதமாக இருக்குமென்றும், அதற்கடுத்த 9 ஆண்டுகளில் இந்த விகிதம் சராசரியாக 6.5 சதவீதமாக இருக்கும்..

ஐரோப்பிய நாடுகளை பொறுத்த அளவில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டதால் அதனுடைய வளர்ச்சி கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். கொரோனா காலத்தில் பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில், அதற்கு பிந்தைய 2021-22-ம் நிதியாண்டில் 8.7 சதவீதமாக வளர்ச்சியடைந்தது.
இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாற்றியிருக்கிறது. இவ்வாறு சி.இ.பி.ஆர் கணித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement