50 ஆண்டுகளில் இல்லாத பனிபுயல்… 60 பேர் பலி… அமெரிக்க துயரம்!

அமெரிக்காவில் வழக்கம்போல் இந்த ஆண்டும் குளிர் காலத்தில் பனிபுயல் வீசி வருகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்திலும் பணி மூடிக் கிடக்கிறது. சாலைகளில் 25 சென்டிமீட்டர் உயரத்துக்கு பனி மூடிக் கிடப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்றுள்ளதால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நியூயார்க், நியூ ஜெர்சி, கலிஃபோர்னியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிபுயல் வீசுவதால், அவசர மருத்துவ தேவைக்கான ஆம்புலன்ஸ்கள் கூட சாலைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

60 பேர் பலி: பனிப்புயலில் சிக்கி தவிப்பவர்களையும், புயலில் சிக்கி இறந்தவர்களையும் மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். பனிப்புயலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 60 பேர் இறந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இறப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

‘இனி கொரோனா பாதிப்புகளை வெளியிட போவதில்லை’ – சீனா அதிரடி!

விமான சேவைகள் ரத்து: கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக, விமானங்களின் ஓடு பாதைகள் முற்றிலும் மறைந்து வெண்பனியாக காட்சி தருவதால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. அமெரிக்கா முழுவகும் மொத்தம் 15 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

அதிபர் இரங்கல்: இதனிடையே, பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் திருநாளில் நிகழ்ந்த இத்துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.