அசாமின் ஜோர்கட் வனப்பகுதியில் சுமார் 9 அடி இரும்பு வேலியை தாண்டிக் குதித்த சிறுத்தை, சாலையில் சென்ற கார் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவை வெளியிட்டுள்ள வனத்துறை அதிகாரிகள், மழைக்காடு ஆராய்ச்சி நிலை பகுதியில் உலாவும் சிறுத்தையின் தாக்குதலுக்கு வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் 15 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.