Income Tax: வருமான வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி, இனி இதற்கு வரி விலக்கு கிடைக்கும்

வருமான வரி: வருமான வரி என்பது வரி வரம்புக்குள் வரும் அனைத்து இந்திய குடிமக்களும் செலுத்தவேண்டிய ஒரு முக்கியமான வரியாகும். நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் இந்த வரி முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது இது தொடர்பான ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு அரசாங்கம் பெரிய நிவாரணம் கொடுக்கப் போகிறது. வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கும் வகையில் பெரிய அளவில் நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் புதிய உத்தரவை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை

வரி செலுத்துவோருக்கு பெரும் நிம்மதியை அளித்து வருமான வரித்துறை சமீபத்தில் வரிவிலக்கு அளித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, இனி வரி செலுத்துவோர் சிகிச்சைக்காக பெறும் தொகைக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, இந்தத் தொகைக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.

சிபிடிடி (CBDT) விலக்கு படிவத்தை வழங்கியது

வரி செலுத்துவோரின் வசதிகளை மனதில் கொண்டு வருமான வரித்துறை அவ்வப்போது விதிகளை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தகவல்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது. CBDT சமீபத்தில் புதிய நிபந்தனைகளையும் கொரோனா சிகிச்சையில் ஏற்படும் செலவுகளுக்கான வருமான வரி விலக்கு படிவத்தையும் வெளியிட்டது.

படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

ஆகஸ்ட் 5, 2022 இன் அறிவிப்பின்படி, இனி வரி செலுத்துவோர் உங்கள் முதலாளி / நிறுவனத்தின் சில ஆவணங்களுடன் வருமான வரித் துறைக்கு ஒரு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதில் முதலாளி / நிறுவனம் அல்லது உறவினர்களிடமிருந்து கொரோனா சிகிச்சைக்காக பெறப்பட்ட தொகைக்கு வரி விலக்கு கோரலாம். 

இதற்கான படிவம் எளிதாக கிடைத்துவிடும்

இது தவிர, வருமான வரித்துறை, மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டும், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும், வரி விலக்கு படிவத்தை டிஜிட்டல் மயமாக்கியது. இதனால், மக்கள் எந்த வித சிரமத்தையும் சந்திக்காமல், அலுவலகங்களை சுற்றி அலையாமல் இந்த படிவத்தை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். 

இதற்கிடையில், தொழில்துறை அமைப்பான அசோசெம் தனது பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரைகளில் அரசாங்கத்திடம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையின் தாக்கம் நாட்டில் வரி செலுத்தும் கோடிக்கணக்கானவர்கள் மீது இருக்கும். வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று அசோசெம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், வரி செலுத்துவோர் அதிக பயனடைவார்கள்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.