இரண்டு ஆண்டுகளுக்கு பின் சதம் அடித்த கேன் வில்லியம்சன்! டெஸ்டில் படைத்த மிரட்டலான சாதனைகள்


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 25வது சதத்தை விளாசினார்.

கேன் வில்லியம்சன்

கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 440 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீரர்கள் டாம் லாதம் 113 ஓட்டங்களும், கான்வே 92 ஓட்டங்களும் விளாசினர்.


முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நிதானமாக ஓட்டங்களை குவித்த அவர், டெஸ்ட் அரங்கில் தனது 25வது சதத்தை எட்டினார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் டெஸ்ட் சதம் அடித்துள்ளார்.

மேலும், டெஸ்டில் 25 சதங்கள் அடித்த இன்ஸமாம் உல் ஹக், டேவிட் வார்னர் ஆகியோருடன் வில்லியம்சன் இணைந்துள்ளார்.

கேன் வில்லியம்சன்/Kane Williamson

@AFP

சாதனைகள்

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த சாதனையை வில்லியம்சன் தக்க வைத்துள்ளார். 20 சதங்களுக்கு மேல் அடித்த ஒரே நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் மட்டும் தான்.

கேன் வில்லியம்சன்/Kane Williamson

@AFP

இந்த சதத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக 1000 ஓட்டங்கள் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார்.

இதற்கு முன் 2021ஆம் ஆண்டு ஜனவரியில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் 238 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் அவர் 5 சதங்களை அடித்துள்ளார்.   

கேன் வில்லியம்சன்/Kane Williamson

@AFP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.