வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளித்து, அம்மாநில அரசு பிறப்பித்த வரைவு அறிக்கையை, அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இட ஒதுக்கீடு இன்றி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 17 மாநகராட்சிகள், 200 நகராட்சி மற்றும் 545 நகர பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில அரசு முடிவு செய்தது.

இந்த தேர்தலில் போட்டியிட ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வரைவு அறிக்கையை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.
இதில், 4 மேயர் பதவிகள், 54 நகராட்சி தலைவர் பதவிகள், 147 நகர பஞ்சாயத்து தலைவர் பதவிகள் ஓ.பி.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டன. இந்த வரைவு அறிக்கையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசு வெளியிட்ட வரைவு அறிக்கையை ரத்து செய்தது. இட ஒதுக்கீடு இன்றி உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க நேற்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement