ஒன்றிய அரசின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் RTI சட்டம் வலுவிழந்துவிடும்: சமூக ஆர்வலர்கள் அச்சம்

டெல்லி: ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரவுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் தகவல் அறியும் உரிமை சட்டம் வலுவிழந்துவிடும் என RTI ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

உலகின் அதிக அளவிலான இணையதள பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது. பிற நாடுகளை போல, இணையதள பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்தியாவில் அனைவரும் அணுகும் வகையில் இருப்பதால் ஆபத்துக்கும் அளவில்லை. பொது தளத்தில் அதிகரித்திருக்கும் தரவுகளை முறையாக கையாளும் நோக்கில், டிஜிட்டல் தனி நபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ன் வரைவு ஒன்றிய மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை கொண்டுவந்துள்ளது. ஆனால் இந்த மசோதா தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிறுத்து போக செய்யும் என RTI ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. ஆனால் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 2019- ம் ஆண்டு முதலே RTI சட்டத்தை வலுவிழக்க செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும், தற்போது அடுத்தகட்ட நகர்வு ஆரமித்துள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

டிஜிட்டல் தளங்களில் தனி நபர்களின் தகவல் பாதுகாப்பு என்று கூறி ஒன்றிய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்தது. இதில் சில சட்ட பிரிவுகள் தனிநபர் தகவல் பாதுகாப்பிற்கும், கருத்து சுதந்திரத்துக்கும் தடையாக இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில், ஒன்றிய அரசு மீண்டும் புதிய வரைவை அறிவித்துள்ளது. பலருக்கு பயன்படும் RTI சட்டத்தைவலு விழக்க செய்யும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.