ஒரு மணி நேரம் தான் ஆச்சு… ஈபிஎஸ் முடிவை மாற்ற வைத்த ஸ்டாலின்… இது கரும்பு பொங்கல்!

வரும் 2023 பொங்கல் பண்டிகையை ஒட்டி 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு சர்க்கரை ஆகியவை மட்டும் தான். இப்படித்தான் முதல்வர்

அறிவிப்பு வெளியிட்டிருந்தார். கடந்த முறையை போல் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு இல்லை. இது தமிழக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது. அப்படியே ரொக்கப் பணத்தையாவது கொஞ்சம் உயர்த்தி வழங்கியிருக்கலாம்.

பொங்கல் பரிசில் குழப்பம்

ஒரு சமயம் 2,500 ரூபாய் வழங்கினார்களே? அதெல்லாம் திரும்ப நிகழாதா? என்றெல்லாம் கனவு கோட்டை தொடங்கினர். இதற்கிடையில் கரும்பு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலுக்கு ஒரு கரும்பு கொடுக்க முடியாதா? கரும்பு இல்லாமல் பொங்கல் எப்படி? என்று அட்ராசிட்டி கேள்விகளை எழுப்பி கதறவிட்டனர்.

நீதிமன்றம் வரை போய்விட்டது

இந்த விஷயத்தை கையிலெடுத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை கையிலெடுத்தன. சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டும் அளவிற்கு சென்றுவிட்டது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்

இன்று காலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

செங்கரும்பு எங்கே?

அதில், அதிமுக ஆட்சியில் ஆண்டுதோறும் தைப் பொங்கலை முன்னிட்டு சர்க்கரை, அரிசி, செங்கரும்பு, ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும். ஆனால் இந்த திமுக ஆட்சியில் 2023 பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு வழங்காமல் ஏமாற்றியுள்ளனர். அரசின் சார்பில் செங்கரும்பை கொள்முதல் செய்வார்கள் என்று நம்பி விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விளைவித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்

தற்போதைய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். எனவே வரும் 2ஆம் தேதி காலை 10 மணியளவில் திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் செங்கரும்பு வழங்காமல் விவசாயிகள் வாழ்வாதாரத்தை சிதைத்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படும்.

ரூ.5,000 வழங்க கோரிக்கை

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 5,000 ரூபாய் வழங்க வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1,000 ரூபாய் ரொக்கப் பணம், பச்சரிசி மற்றும் சர்க்கரை உடன் கரும்பும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

தமிழக அரசு அதிரடி

வரும் ஜனவரி 9ஆம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியின் போராட்ட அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில் தமிழக அரசு அதிரடி வெளியானது. இதனால் தனது போராட்டத்தை கைவிட வேண்டிய சூழலுக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார்.

அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி

இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பை அதிமுக தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது. இதுதொடர்பாக அதிமுக ட்விட்டரில், பொங்கல் பரிசு தொகுப்பில் மீண்டும் முழுக்கரும்பு. இது அதிமுகவிற்கும், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களுக்கும், விவசாயிகளின் போராட்டத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.