டெல்லி : காங்கிரஸ் கட்சியின் 138-வது நிறுவன நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடிக்கு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
டெல்லி மட்டுமில்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் விழா நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி கனிவாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சோனியாவின் கன்னத்தை தொட்டு பாசத்தை வெளிப்படுத்திய காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அண்மையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சோனியா பங்கேற்ற போது அவரது ஷூ கயிறை ராகுல்காந்தி தரையில் உட்கார்ந்து காட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.