காதலியை கரம்பிடிக்க உதவியாளரை கொலை செய்து ஆள்மாறாட்டம்; 65 வயது முதியவர் கைது

புனே,

மராட்டியத்தில் புனே நகரில் சர்கோளி குர்த் பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ் என்ற கெர்பா சபான் தோர்வே (வயது 65). இவரது உதவியாளர் ரபீந்திர பீமாஜி கெனாந்த் (வயது 48). சுபாசுக்கு பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது.

அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு உள்ளார். ஆனால், சுபாஷின் குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதனால், என்ன செய்வது என்று யோசித்த சுபாஷ், உதவியாளரை கொலை செய்து, தலையை துண்டித்து, தனது உடையை அந்த உடலுக்கு போட்டுள்ளார். அதன்பின், உடலை துண்டுகளாக்கி விட்டி தப்பி சென்றுள்ளார்.

எனினும், சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சுபாஷை பிடித்து, விசாரித்ததில் அவர் போலீசாரிடம் உண்மையை ஒப்பு கொண்டார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம், கொலையான உதவியாளரின் தலை மற்றும் உடைகளை தேடும் பணி நடந்து வருகிறது.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. காதலியை கரம்பிடிக்க உதவியாளரை கொலை செய்து ஆள்மாறாட்டத்தில் முதியவர் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.