கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட தமிழ் வர்த்தகர்! விசாரணை குழுக்களுக்கு பொலிஸ் மா அதிபர் அவசர அழைப்பு


பிரபல தொழிலதிபரான தினேஷ் ஷாப்டர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சகல குழுக்களுக்கும் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவினால் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்பான முன்னேற்றத்தை ஆராய்தல் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

8 குழுக்கள்

தினேஷ் ஷாப்டர் உயிரிழந்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட 8 குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட தமிழ் வர்த்தகர்! விசாரணை குழுக்களுக்கு பொலிஸ் மா அதிபர் அவசர அழைப்பு | Dinesh Schaffter Murder Sl Police Investigation

இதனிடையே, தடயவியல் புலனாய்வு குழு, கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைக் குழுக்கள் ஆகிய பிரிவுகள் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுக்களின் விசாரணை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பொலிஸ் மா அதிபரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.