மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தினேஷ் சாப்டரின் மரணம் குறித்து அவரது மாமியாரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி தொடர்பில் அவரிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாமியாருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி
வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு மன்னர் அவரது மாமியாருக்கு இந்த குறுஞ்செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.
மிகச் சிறந்த மகளை வளர்த்தமைக்கு உங்களிற்கு நன்றி என சாப்டர் தனது குறுஞ்செய்தியில் தெரிவித்திருந்தார் என்று செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.