கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கூடி நின்று கொடியேற்றத்தை கண்டுகளித்துடன், சிவபெருமானின் ஆசி பெற்று சென்றனர். உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. ஆருத்ரா தரிசனம்விழா 11 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தவிழாவின்போது, தினசரி பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் நடைபெற […]
