சேலம்: சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும், காவிரி ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். இந்த சோக சம்பவம் சேலம் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இது அதிர்ச்சியை ஏறப்டுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் 42, இவரது மனைவி மான்விழி 35, இந்த தம்பதிக்கு நிதிஷா என்கின்ற நேகா 7, அஷரா 5 என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு சிறுவயது முதலே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
