சென்னை: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14,138 பாசனக் குளங்களில் 4,433 பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன என நீர்வளத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீா்வளத்துறை பராமாிப்பில் 38 மாவட்டங்களில் மொத்தம் 14 ஆயிரத்து 138 பாசனக் குளங்கள் உள்ளது. இந்த குளங்கள் மழை காலங்களில் பெய்யும் மழை மற்றும் காட்டாற்று தண்ணீர் காரணமாக நிரம்பி வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள குளங்கள் காவிரி தண்ணீர் மூலமும், மதுரை மாவட்டத்தில் உள்ள பல குளங்கள், முல்லை பெரியாறு, […]
