திருநெல்வேலி மாவட்டத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டு மேச்சேரி பகுதியை சேர்ந்த கருப்பண்ணன். இவரது மகன் ரஞ்சித் குமார் (22) திருநெல்வேலி வடுகச்சிமதிலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை ரஞ்சித் குமார் தனது நண்பர்களுடன் ஆலங்குளம் பகுதியில் உள்ள குலத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது ரஞ்சித் குமார் நீரில் மூழ்கியுள்ளார். இதை எடுத்து அவரது நண்பர்கள் ரஞ்சித் குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ரஞ்சித் குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால், இதுகுறித்து நாங்குநேரி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், 20 அடி ஆழமுள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்த ரஞ்சித் குமாரின் உடலை கைப்பற்றினர். பின்பு போலீசார் ரஞ்சித் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.