களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அந்த அதிகாரசபைக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (27) அறிவித்திருந்தார்.
இது தொடர்பான அறிக்கை நேற்று (27) விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கையளிக்கப்பட்டதன் பிறகு அவரது ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி மோசடி குறித்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகம் முறையான விசாரணை நடத்தவில்லை என்று சமீபகாலமாக ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டை மறுக்கும் பொது முகாமையாளர் இது தொடர்பாக ஆரம்ப முறையீடு பெயர் குறிப்பிடப்படாத தொலைபேசி அழைப்பாக அப்போதைய மாவட்ட முகாமையாளருக்கு கிடைத்தது இவவாண்டு மார்ச் மாதம் என்றும் மாவட்ட முகாமையாளர் அது தொடர்பாக தனக்கு அறிவித்ததன் பின்னர் தலைமைக் காரியாலயத்தின் ஊடாக விசாரிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட பிறகு, அதற்கான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.
அதன்படி, அதிகாரசபையின் உள்ளக கணக்கு தணிக்கை பிரிவு நடத்திய விசாரணையில் இறுதி அறிக்கை நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது.
நிறுவன மட்டத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த நிதி மோசடி 2018 முதல் 2022 முதல் காலாண்டு வரை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் சம்பவம் தொடர்பான சில ஆவணங்களும் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாசவேலை சம்பவம் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதனுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட கணக்காளர் மற்றும் கணக்கு உத்தியோகத்தர் உட்பட 9 பேர் பணி இடைநிறுத்தப்பட்டு இதற்கிடையில், விசாரணைகளின் விளைவாக இது தொடர்பான பணி தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வீடமைப்பு அதிகார சபையுடன் தொடர்புடைய எந்தவொரு நிறுவனத்திலும் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொது முகாமையாளர் கூறுகிறார்.
மேலும் எதிர்காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் இது போன்ற மோசடிகள் இடம்பெறுவதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின்படி விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.ஏ. ஜானக குறிப்பிடுகிறார்.
அந்த நோக்கத்திற்காக கணினி தரவுகளை சேமித்து, மாதந்தோறும் செலுத்தப்படும் தொகை மாவட்ட அலுவலகம் மூலம் எஸ்எம்எஸ் மூலம் கடன் பெறுபவர்களுக்கு அறிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற அடிப்படை நடவடிக்கைகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இது தொடர்பாக மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது முகாமையாளர் தெரிவித்தார்.