டெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு தமிழக அரசு அனுமதி கோருவது தேசிய இறையாண்மைக்கு எதிரானதா? என உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் 2 துறைகள் வெவ்வேறான பதில் அளித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வெவ்வேறான பதில் அளித்துள்ளது. நீட் விலக்கு மசோதா இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கு எதிரானது இல்லை என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. என குறிப்பிட்டுள்ளது.
