பிரதமர் மோடிக்கு எனது ஆதரவு உள்ளது; ராகுல் காந்தி ஆறுதல்.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5ம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, டிசம்பர் 1ம் தேதி முதல்கட்ட தேர்தலும், டிசம்பர் 5ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டு டிசம்பர் 8ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

குஜராத்தில் ஆட்சியமைக்க 92 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக பெரும்பான்மை பெற்றது. குஜராத் மாநிலத்தில் 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 149 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதுவே அதிக தொகுதிகளில் ஒரு கட்சி அம்மாநிலத்தில் வெற்று பெற்ற வரலாற்று சாதனையாக இருந்தது. அதனை 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறியடித்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை மிகவும் மோசமாக தோல்வியடைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரும் சவாலாக இருக்கும் என கூறப்பட்டது. அதன்படியே அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு வெறும் 5 இடங்களே கிடைத்தன. இருப்பினும், அக்கட்சியின் வாக்கு பகிர்வு சுமார் 13 சதவீதமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலின் முந்தைய நாள், பிரதமர் மோடி தனது சொந்த ஊர் சென்று, தேர்தலில் வெற்றி பெற தனது தாயாரிடம் ஆசி பெற்றார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தநிலையில் பிரதமர் மோடியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தைத் தொடர்ந்து 99 வயதான பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, நேற்று இரவு திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயாரின் உடல்நிலை நிலையாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் வெளியானதும் குஜராத் பாஜக எம்எல்ஏக்கள் தர்ஷணாபென் வகேலா மற்றும் கௌசிக் ஜெயின் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அதேபோல் பிரதமர் மோடியும் தனது தாயாரை காண சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

முதல்வர் கேசிஆருக்கு பின்னடைவு: எம்எல்ஏக்கள் பேரம் வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

இந்தநிலையில் பிரதமரின் தாயார் விரைவாக குணமாக ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘ தாய் மற்றும் மகனுக்கு இடையிலான அன்பு நித்தியமானதும், விலை மதிக்க முடியாததும் ஆகும். இந்த கடினமாக சூழலில் மோடி ஜிக்கு எனது அன்பும், ஆதரவும் உள்ளது. தாயார் விரைவாக குணமடைவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.