பொங்கல் சிறப்பு ரயில்கள்: சொந்த ஊர் செல்ல சூப்பர் வசதி… தெற்கு ரயில்வே!

பொங்கல் பண்டிகையை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவர். ஆனால் பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதும். இந்த சூழலில் பொங்கல் சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை ஐந்து சிறப்பு ரயில்களின் பட்டியலை வெளியிட்டு தமிழக பயணிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

ரயில் எண் 06021 தாம்பரம் – திருநெல்வேலி

ஜனவரி 12, 2023 அன்று இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ஜனவரி 13 அன்று பிற்பகல் 1 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரயில் எண் 06041 தாம்பரம் – நாகர்கோவில்

ஜனவரி 13 இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் ஜனவரி 16 மாலை 5.10 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06044/06043 கொச்சுவேலி – தாம்பரம் – கொச்சுவேலி

ஜனவரி 17 காலை 11.40 மணிக்கு கொச்சுவேலியில் புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில் ஜனவரி 18 காலை 10.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி சென்றடைகிறது.

இந்த ரயில் திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06046/06045 எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம்

ஜனவரி 12 இரவு 11.20 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில் ஜனவரி 13 பிற்பகல் 2.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06057/06058 தாம்பரம் – திருநெல்வேலி – தாம்பரம்

ஜனவரி 16 இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில் ஜனவரி 17 இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.