போருக்குச் சென்ற உக்ரைன் அழகி… போர் முனையில் ஒரு மகிழ்ச்சியான விடயம்

அழகிப்பட்டம் பெற்றவர்கள் பொதுவாக நாட்டுக்கு சேவை செய்வேன் என்பார்கள். ஆனால், கொஞ்சம் நாட்களுக்குப் பின் சினிமாவிலும் அழகுப்பொருட்கள் விளம்பரத்திலும் நடித்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால், உக்ரைன் அழகிப்பட்டம் பெற்ற ஒரு அழகிய இளம்பெண், உண்மையாகவே தன் நாட்டுக்கு சேவை செய்வதற்காக போர் முனைக்கே சென்றுவிட்டார்.

போர் முனைக்கே சென்ற அழகிப்பட்டம் பெற்ற பெண்

Earth 2012 என்னும் அழகிப்போட்டியில் Queen of Ukraine என்னும் பட்டம் வென்றவர் Evgenia Prokopenko (35). தான் பட்டம் வென்றபோது இராணுவத்தில் மருத்துவராக இணையப்போவதாக Evgenia கூறியபோது, மற்ற அழகிகளைப்போலத்தான் அவரும் ஏதோ சொல்கிறார் என்றுதான் மக்கள் நினைத்திருப்பார்கள்.

ஆனால், தனக்கென சொந்தமாக ஒரு சட்ட நிறுவனம் இருந்தும், நாட்டுக்காக பணி செய்ய இராணுவத்தில் சேர்ந்துவிட்டார் Evgenia.

போருக்குச் சென்ற உக்ரைன் அழகி... போர் முனையில் ஒரு மகிழ்ச்சியான விடயம் | Ukrainian Beauty Who Went To War

Image: Facebook

போர் முனையில் ஒரு மகிழ்ச்சியான விடயம்

போருக்குச் சென்ற Evgeniaவுக்கு உயிரைக் காக்கும் மருத்துவப் பணி செய்யத் தெரியும் என்பதுடன், அவருக்கு துப்பாக்கி பிடிக்கவும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், போர் முனையில் Evgeniaவுக்கு சக வீரர் ஒருவருடன் காதல் பூக்க, இருவரும் இராணுவ உடையிலேயே திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

போருக்குச் சென்ற உக்ரைன் அழகி... போர் முனையில் ஒரு மகிழ்ச்சியான விடயம் | Ukrainian Beauty Who Went To War

Image: evgenya_prokopenkoandradistsnaypera

இந்த Evgenia, நான் புடினுக்காக ஒரு துப்பாக்கிக் குண்டு வைத்திருக்கிறேன் என கூறியவர் ஆவார். வெறும் வாய்ச்சொல் வீராங்கனை அல்ல அவர். ஆம், அவரும் அவரது சக வீரர்களும் ஆறு மாதங்களாக ரஷ்யப்படையினர் வசம் இருந்த உக்ரைனிலுள்ள Izyum என்ற நகரையும், அதன் அருகிலுள்ள சில கிராமங்களையும் ரஷ்யப்படையினரிடமிருந்து விடுவித்து மக்களை மீட்டவர்கள் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும்!
 
போருக்குச் சென்ற உக்ரைன் அழகி... போர் முனையில் ஒரு மகிழ்ச்சியான விடயம் | Ukrainian Beauty Who Went To War

Image: Facebook

போருக்குச் சென்ற உக்ரைன் அழகி... போர் முனையில் ஒரு மகிழ்ச்சியான விடயம் | Ukrainian Beauty Who Went To War

Image: Facebook

போருக்குச் சென்ற உக்ரைன் அழகி... போர் முனையில் ஒரு மகிழ்ச்சியான விடயம் | Ukrainian Beauty Who Went To War

Image: evgenya_prokopenkoandradistsnaypera

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.