திருச்சி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தடையை மீறி டிரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கூறியுள்ளார்.
மணப்பாறை மொண் டிப்பட்டியில் உள்ள காகித ஆலையில் ரூ.1,350 கோடி யில் புதிதாக கட்டிய 2ம் அலகு மற்றும் சிப்காட் தொழிற்பூங்காவை முதல் வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நாளை திருச்சி அண்ணா விளையாட்டரங்கம், மணப்பாறை மொண்டிப் பட்டி காகித ஆலையில் நாளை (29ம் தேதி) நடைபெ றும் அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக காலை 9.30 மணியளவில், சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி செல்கிறார்.
இதனை அடுத்து பாதுகாப்பு காரணங்களால் திருச்சியில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.