230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத்தில், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2024-ல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்தலுக்கான திட்டமிடலை பா.ஜ.க தற்போதே தொடங்கிவிட்டது. இந்த நிலையில் நீர்வளம், ஆறு மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிர்ப்பு ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்த, பா.ஜ.க-வின் மூத்த தலைவர் உமா பாரதி, மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு பெரிய கூட்டத்தில் மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மக்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை.
उमाजी का यह भाषण भाजपा द्वारा चुभाये जा रहे शूल का दंश है।चोरी के नेताओं के लिये आत्मीय कार्यकर्ताओं की इतनी उपेक्षा ? 2018 रिपीट होगा,यह तय है। #भाजपामेंमहाभारत pic.twitter.com/oH8ZQuS4P8
— Bhupendra Gupta Agam (@BhupendraAgam) December 27, 2022
நான் பா.ஜ.க-வின் விஸ்வாசமான தொண்டர். எப்போதும் நான் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிப்பேன். ஆனால், பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள் என்ற என்னுடைய வேண்டுகோளை நீங்கள் ஏற்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் விருப்பம் மற்றும் மக்கள் நலன் கருதி வாக்களியுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.