விஜய்யின் சினிமா, அரசியல் பற்றி எதுவும் தெரியாது : ஷோபா சந்திரசேகர் பேட்டி

நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியில் வந்தவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். குறிப்பாக விஜய்யின் வாரிசு படம், அவரது அரசியல் பிரவேசம் பற்றி கேட்டனர்.

இதற்கு பதிலளித்து ஷோபா சந்திரசேகர் கூறியதாவது: நான் அம்பாளை தரிசிக்க வந்தேன். நிறைவான தரிசனம் கிடைத்தது, நீண்ட நேரம் அம்பாளை தரிசித்தேன். உலகம் முழுக்க உள்ள மக்கள் மனநிம்மதியுடன், வியாதிகள் எதுவுமின்றி நலமுடன் வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.

விஜய்யின் அடுத்த படம் பற்றி என்னிடம் கேட்கிறீர்கள். அவர் இப்போது நடித்து வரும் வாரிசு படத்தில் என்னவாக நடிக்கிறார் என்பதுகூட எனக்குத் தெரியாது. குடும்ப படம் என்பது மட்டும் தெரியும். விஜய் படம் நல்லா ஓடணும்னு எல்லோரும் பிரார்த்தனை பண்ணுங்க. விஜய் அரசியல் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது. அது அவர் முடிவெடுப்பது. கடவுள் என்ன நினைக்கிறாரோ அது நடக்கும். அதுக்கு மேல் எனக்கு எதவும் தெரியாது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.