கடலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்த மிரட்டிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பெரிய குமட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் கூலித்தொழிலாளி மணிகண்டன்(26). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக கூறி, மறுத்தால் உடலில் ஆசிட் ஊற்றி விடுவதாக சிறுமியை மிரட்டி உள்ளார்.
இதையடுத்து சிறுமியை தனியாக அழைத்துச் சென்று அங்கு மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து இந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி பலமுறை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி இது குறித்து தாயிடன் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்தனர்.