தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பு வழங்காததை கண்டித்து விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதேபோன்று திமுகவின் கூட்டணி கட்சிகளும் செங்கரும்பு வழங்க வேண்டும் என அறிக்கையின் மூலம் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தமிழக முழுவதும் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு உடன் செங்கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள செங்கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரும்பு விவசாயிகளின் கோரிக்கை ஏற்று மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.