பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று 80வது நாள் தொடங்கி இருக்கிறது. அதன்படி பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியில் நேற்றிலிருந்து ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது, இதனால் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வர தொடங்கி இருக்கின்றனர். அதன்படி முதலில் மைனா நந்தினி, ஷுவின் மற்றும் அமுதவாணனின் குடும்பத்தினர் வந்து செய்திருந்தனர். அத்துடன் ரச்சிதாவின் குடும்பத்தினர் இன்றைய முதல் ப்ரோமோவில் வந்திருக்கின்றனர். இதனால் அவர்கள் இன்று வீட்டிற்கு என்ட்ரி தரயுள்ளனர்.
இதனிடையே தற்போது 12 வது வாரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், இன்னும் சில நாட்களில் இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 முடிவடைய இருக்கிறது. மொத்தம் 21 போட்டியார்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 9 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். அந்த வகையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து தனலட்சுமி வெளியேறினார்.
டிக் டாக் பிரபலமான தனலட்சுமி கடும் முயற்சிகளுக்கு இடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தனலட்சுமி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்து 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவரது ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்த நிலையில், ஒரு நாள் சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி மொத்தம் 76 நாட்களுக்கு 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக தனலட்சுமி பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில் இந்த வார நாமினேஷனில் அசீம், கதிரவன், நந்தினி, ரச்சிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிய வரும் என்பது குறிப்பிடத்தகக்கது.