பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் விரைவில் மருத்துவமனைக்கு சென்று தாயாரை சந்திப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, குஜராத் சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீராபென் மோடியை காந்திநகரின் ரைசன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தனது தாயாரின் ஆசியை பெற்றார். குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வந்து வாக்களித்து சென்றார்.
இது குறித்த தகவல்கள் மேலும் எதிர்பார்க்கப்படுகின்றன.
முன்னதாக செவ்வாய்க்கிழமை, கர்நாடகா மாநிலம் மைசூரில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியதில் காயமடைந்தனர். கார் டிவைடரில் மோதியதில் பிரதமர் மோடியின் தம்பி பிரகலாத் விபத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.