Omicron BF.7: அடுத்த 40 நாட்கள் மிகுந்த கவனம் தேவை! எச்சரிக்கும் சுகாதார அமைச்சகம்!

புது தில்லி: இந்தியாவைப் பொறுத்தவரை, அடுத்த 40 நாட்கள் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் இந்தியாவில் ஜனவரியில் கோவிட் -19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI செய்தி நிறுவனம் புதன்கிழமை (டிசம்பர் 28, 2022) தெரிவித்துள்ளது. “முன்பு, கிழக்கு ஆசியாவைத் தாக்கிய 30-35 நாட்களுக்குப் பிறகு, கொரோனா வைரஸின் புதிய அலை இந்தியாவைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது” என்று ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் நோய்த்தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த இரண்டு நாட்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சனிக்கிழமை முதல் ஒவ்வொரு சர்வதேச விமானத்திலும் வரும் இரண்டு சதவீத பயணிகளுக்கு ராண்டம் கோவிட்-19 பரிசோதனையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் டெல்லி விமான நிலையத்திற்கு சென்று அங்குள்ள பரிசோதனை மற்றும் ஸ்கீரினிங் வசதிகளை ஆய்வு செய்ய உள்ளார். சீனா மற்றும் தென் கொரியா உட்பட சில நாடுகளில் கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், எந்தவொரு நிலைமையையும் சமாளிக்க தயாராகுமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த வாரம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சுகாதார அமைச்சர் மாண்டவியா ஆகியோரும் தொற்று பாதிப்புகளை சமாளிக்க நாட்டின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கான கூட்டங்களை நடத்தினர்.

கோவிட் -19 நோய்த்தொற்றின் எந்தவொரு பாதிப்பையும் சமாளிக்க செயல்பாட்டுத் தயார்நிலையைச் சரிபார்க்க செவ்வாயன்று இந்தியா முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் போலி பயிற்சிகள் நடத்தப்பட்டன, உலகில் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாடு எச்சரிக்கையாகவும் தயாராகவும் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

சமீபத்திய  Omicron துணை மாறுபாடு BF.7 பதற்றத்தை ஏற்அடுத்தியுள்ளது இதன் பரவும் தன்மை “மிக அதிகமாக” இருப்பதாக கூறப்படுகிறது. துணை மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் மேலும் 16 நபர்களை பாதிக்கலாம்.

இதற்கிடையில், இந்தியாவில் 188 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் சிகிச்சையில் உள்ள கோவிட் -19  தொற்று பாதிப்புகள் 3,468 ஆக உயர்ந்துள்ளது என்று புதன்கிழமை புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. சிகிச்சையில் உள்ள கோவிட்-19 தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 47 என்ற அளவில் அதிகரித்துள்ளன. இந்தியாவின் மொத்த கோவிட் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 4,46,77,647 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 5,30,696 ஆக உள்ளது.

நாட்டில் இதுவரை 220.07 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. தினசரி நேர்மறை விகிதம் 0.14 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 0.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,43,483 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் வழக்கு இறப்பு விகிதம் இருந்தது. 1.19 சதவீதமாக பதிவாகியுள்ளது. 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.