Samsung One UI 5 அறிமுகம்! இனி பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்!

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான Samsung நிறுவனம் அதன் புதிய One UI 5 OS ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட Security மற்றும் புதிய Privacy Dashboard இடம்பெற்றுள்ளது. இதனால் இனி நமது பாதுகாப்பு தேவைகளை சுலபமாக கட்டுப்படுத்தலாம்.

இந்த புதிய Privacy Dashboard மூலமாக இனி பயனர்கள் அவர்களின் போன்களில் உள்ள ஆப் அனைத்திற்குமான அனுமதி, டேட்டா போன்றவற்றை தெரிந்துகொண்டு மாற்றலாம். தேவயானவற்றிற்கு மட்டும் அனுமதி வழங்கி தேவையில்லாதவற்றிற்கு அனுமதி மறுக்கலாம். இந்த புதிய Samsung One UI 5 உள்ளே இடம்பெறுள்ள முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

விளம்பரங்களை நிர்வகிக்கலாம்

ஆன்லைன் மூலம் அடிக்கடி ஷாப்பிங் செய்யும் பயனர்கள் அவர்களுக்கான தனிப்பட்ட விளம்பரங்கள் எதுவும் வராமல் நாம் இனி பார்த்துக்கொள்ளலாம். இதை செய்ய அவர்கள் Dashboard- Privacy Tab- Ads Menu- Delete AD ID ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

கேமரா மற்றும் மைக்ரோபோன் அனுமதி

குறிப்பிட்ட சில ஆப் நமது கேமரா மற்றும் மைக்ரோபோன் பயன்படுத்தாமல் இருக்க நாம் அனுமதி மறுக்கலாம். நமக்கு நம்பிக்கை தரும் ஆப் மட்டும் நமது கேமரா மற்றும் மைக்ரோபோன் பயன்படுத்த அனுமதியளிக்கலாம்.

Location அனுமதி

நமது போன்களில் அதிகம் நாம் ஏமாற்றப்படுவது இந்த Location மூலமாகத்தான். பல செயலி நமது Location அல்லது இருப்பிடத்தை தேவையில்லாமல் தெரிந்துவைத்திருப்பார்கள். இதையும் நாம் சரிபார்த்து மாற்றலாம். இதில் மேலும் நமது இருப்பிடத்தை எந்தெந்த ஆப் கடந்த 24 மணிநேரம் கண்காணித்தன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ஆப் பயன்பாடு

பல ஆப் நாம் install செய்தபின் மறந்துவிட்டு பயன்படாமல் அப்படியே இருக்கும். ஆனால் இவை தொடர்ந்து நமது செயல்பாட்டை கண்காணித்தபடியே இருக்கும். இந்த ஆப் அனுமதியை நாம் தடுக்கலாம். இதற்காக இந்த வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. Samsung ONE UI 5 இப்பொது புது பொலிவுடன் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வந்திருப்பது பயனர்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.