கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் நேற்று (28) முதல் 55 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பமானது.
இதன் போது விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் லொரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளை கொள்வனவு செய்தார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுக்கிடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக, 55 ரூபாவுக்கு முட்டையை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் இந்த நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.
இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக நேற்று கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் முட்டைவிற்பனை முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக நாட்டில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் சதோச விற்பனை நிறுவனங்களுக்கும் முட்டைகளை விநியோகிக்கப்பதற்கு விவசாய அமைச்சு வசதிகள் செய்துக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.