சென்னை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். போட்டித் தேர்வுக்கு பதிலாக தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
