"இது கூடவா தெரியாது?” துப்பாக்கியில் தோட்டா நிரப்ப திணறிய உ.பி. போலீஸ்… கடுப்பான டிஐஜி!

காவல் நிலையங்களில் உயரதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தும் போதுதான், எந்தளவுக்கு தகுதியுடைய காவலர்கள் பணியில் இருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வரும். அப்படித்தான் இரு தினங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் அம்மாநில டிஐஜி திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரியவந்துள்ளது. ஆய்வின்போது, சப்-இன்ஸ்பெக்டரொருவரின் செயலை பார்த்து ஆய்வுக்கு சென்றிருந்த டி.ஐ.ஜி கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்.
சந்த் கபிர் நகரில் உள்ள காலிலாபாத் காவல் நிலையத்தில் மாநில டி.ஐ.ஜி பரத்வாஜ் தலைமையிலான காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காலிலாபாத் காவல்துறையினரின் துப்பாக்கிச் சுடும் திறனை அவர்கள் சோதித்து பார்த்திருக்கிறார்கள்.
image
அதன்படி சப்-இன்ஸ்பெக்டரை தோட்டாவோடு துப்பாக்கியை லோட் செய்யுமாறு கூறியிருக்கிறார்கள். இதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த உதவி ஆய்வாளர், தன்னிடம் இருந்த ரைஃபிள் துப்பாக்கியை பீரங்கியை இயக்குவது போல பிடித்துக்கொண்டு அதன் முனையில் குண்டை வைத்து சுட முயற்சித்திருக்கிறார்.

कोतवाली में निरीक्षण के दौरान जो भी खामियां मिली हैं, वे कहीं न कहीं ट्रेनिंग या अभ्यास न होने का नतीजा था। जो कमी आई है, उस कमी को हम अभ्यास और ट्रेनिंग से पूरा करेंगे: आर.के. भारद्वाज, आईजी बस्ती मंडल pic.twitter.com/8XKEeyXLEN
— ANI_HindiNews (@AHindinews) December 28, 2022

இதனைக் கண்டு கடும் அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் ஆளான டி.ஐ.ஜி பரத்வாஜ், “துப்பாக்கியில் தோட்டாவை கூட லோட் செய்ய தெரியாமல் அப்படி என்னதான் பயிற்சியின் போது கற்றுக்கொண்டீர்கள்? முதலில் துப்பாக்கியில் எப்படி குண்டுகளை லோட் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். ஆபத்தான நேரத்தில் துப்பாக்கியை பயன்படுத்த தெரியாமல் எப்படி சமாளிப்பீர்கள்?” என கோவமாக கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.