டெல்லி: இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர்; 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர். ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், ‘இந்தியாவில் சாலை விபத்துகள் – 2021’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
