டெல்லி: இந்தியாவில் 2036ம் ஆண்டு ‘ஒலிம்பிக்’ போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார். 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா ஏலம் எடுக்கும் என்றும், இந்த முயற்சி வெற்றி பெற்றால், ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நான்காவது ஆசிய நாடு என்ற பெருமையைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் (Olympic […]
